• HOME
  • ABOUT
  • BOOKS
  • ARCHIVE

    • November 13, 2025
      எழுத்து, வாசிப்பு

      ஆற்றொழுக்கும் பகடையாட்டமும்

      நேற்று எங்கள் bukpet எழுத்தாளர் குழுவில் புதிதாகச் சிறுகதை எழுதத் தொடங்கியிருக்கும் ஒருவர், எழுதுவதில் தனக்குள்ள குழப்பங்களைப் பகிர்ந்துகொண்டபோது கீழ்க்கண்டதில் முதலிரண்டு விஷயங்களை அவருக்குச் சொன்னேன். அதை இன்னும் நீட்டித்து, இன்னும் மூன்று முக்கிய விஷயங்களைத் தொகுத்து எனக்காக எழுதி வைத்துக்கொண்டேன்.

      மேலும் வாசிக்க…


      • November 11, 2025
        எழுத்து, மனவெழுச்சி, மயல்

        யக்‌ஷிகளை எழுப்புதல்

        கடந்த வாரயிறுதியில் Vasteras தமிழ்ச் சங்கத்திற்காகப் புனைவெழுத்து பற்றிய சிறிய உரையாற்றியிருந்தேன். அதில் மொழி, கட்டமைப்பு, கற்பனை என்னும் மூன்று முக்கியக்கூறுகளைப் பற்றி விளக்கினேன். தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு சாதாரணன் செல்வது வேறு. அதன் வரலாறு, தொன்மம், சிற்பம், தத்துவம், கட்டடக்கலை ஆகியவற்றை அறிந்து செல்பவன் வேறு. இவை யாவையும் அறிந்த பின்னர் அதன் மீது தன் கற்பனையை ஏற்றி அனுபவிப்பவன் வேறு என்று ஓர் உதாரணம் கொண்டு கற்பனையைப் பற்றி விளக்கினேன். இந்த உரையைக்

        மேலும் வாசிக்க…


        • November 9, 2025
          எழுத்து, Uncategorized

          புனைவு: வாசிப்பும் எழுத்தும் – ஓர் உரை

          ஸ்வீடன் நாட்டின் வேஸ்தரஸ் (Västerås) நகர தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக நேற்று மாலை ‘புனைவு: வாசிப்பும், எழுத்தும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாற்றினேன். புனைந்து சொல்லப்படும் கதைகளின் மீது நம் ஆர்வம் எங்கிருந்து உருவாகி வளர்கிறது? வாசிப்பின் மீதான நம் ஆளுமையை விரிவாக்கிக் கொள்வது எப்படி? காட்சி ஊடகங்களின் பாதிப்பிலிருந்து மீண்டு, சொற்களின் உலகில் புகுந்து மகிழ்வது எப்படி? இதுவரை வாசிப்புப் பக்கமே ஒதுங்காதவர்கள் எங்கிருந்து தொடங்கலாம்? எழுதுவதற்கான அடிப்படைகள் என்ன? எப்படி ஒரு கதையை வாசகன் ரசிக்கும்

          மேலும் வாசிக்க…


          • November 6, 2025
            எழுத்து, மனவெழுச்சி

            தவப்பத்து

            எழுதுதல் பற்றிய குறிப்புகள் புத்தகம் எனக்கு ஒரு புனித நூல். அகராதிக்கு அடுத்தபடியாக என் மேசையில் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இரண்டாவது புத்தகம் அது. அதன் ஒவ்வொரு சொல்லையும் கிட்டத்தட்ட மனப்பாடம் செய்திருக்கிறேன். அதில்தான் இந்தத்  தவப்பத்து வருகிறது. இது ஆசிரியர் கொடுத்த தலைப்பல்ல. நான் எனக்காக வைத்துக்கொண்டது. இது புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயமான ஜென்  ராஜா வில் வருகிற ஆரம்பப் பத்திகள். (அதற்குப் பிறகு அந்த அத்தியாயம் பேசும் இன்னொரு உன்னதம் இருக்கிறது. அதைத் தவறவிடாதீர்கள்) இந்தப் பத்தும்

            மேலும் வாசிக்க…


            • October 30, 2025
              எழுத்து, மனவெழுச்சி

              தேவதைகள் தரும் ரோஜாக்கொத்து

              நேற்று வாசக நண்பர் சுரேஷ் அமாசி மேற்கண்ட மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதன் கடைசி வரியைப் படித்து நெடு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். (உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் தினம் தினம் ஏதாச்சும் தேவதை வந்து ரோசாப்பூ கொடுத்து எழுப்புதா). நிதர்சனம் என்னவென்றால், இன்றைய தேதியில் பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லோரையும் ,காலைப்பொழுதை வெறுப்பவர்களாகத்தான் மாற்றி வைத்திருக்கிறது காலம். என் வேலை நேரம் அமெரிக்க நேரம் சார்ந்தது (EST). பெரும்பாலும் என் நாள் நள்ளிரவில் / அதிகாலையில்தான் நிறைவுறும். பணி நேரம்

              மேலும் வாசிக்க…


              • October 29, 2025
                எழுத்து, மனவெழுச்சி

                விழி, எழு, ஓடு

                விழி, எழு, ஓடு என்பதுதான் மானுடம் கண்ட மூன்று மகத்தான வார்த்தைகள் என நம்புகிறேன். நம் அன்றாடங்களில் குழப்பங்களுக்கும், வினாக்களுக்கும், தோற்ற மயக்கங்களுக்கும், துன்பங்களுக்கும் குறைவேதுமில்லாத இடமுண்டு. இவை அனைத்துமே நம்மை வீழ்த்தக் காத்திருக்கும் சிற்றரக்கர்கள். உட்கார், உறங்கு, போதும், இன்னும் சிறிது நேரம் அலைப்பேசி பார் என்று சிற்றின்பங்களில் தள்ளிவிடும் இனிப்புக்கரங்கள் கொண்ட அவுணன். இப்படிப்பட்ட தருணங்களிலெல்லாம், விழு, எழு, ஓடு என்ற மூன்றோடு அலைந்து திரி என்ற நான்காவதாக ஒன்றையும் சேர்த்துக்கொள்கிறேன். இது தீர்வுக்கான

                மேலும் வாசிக்க…


                • October 15, 2025
                  எழுத்து, மயல்

                  மயல் – முன்னோட்டம்

                  என்னுடைய முதல் நாவல் ‘மயல்’ , வெகு விரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்கென தயாரிக்கப்பட்ட டீசர் இது. சென்ற மாதம் விமரிசையாக நடந்த ஓர் இணைய நிகழ்வில் பதிப்பாளர்கள், ஸீரோ டிகிரி ராம்ஜி மற்றும் காயத்ரி ஆகியோர் இதனை வெளியிட்டனர். ஆசிரியர் பா.ரா தலைமையில் நடந்த விழாவில், ஊடகவியலாளர் ஆர்.வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரளான வாசகர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். டீசர் உங்கள் பார்வைக்கு இங்கே.

                  மேலும் வாசிக்க…


                  • October 2, 2025
                    எழுத்து, மயல், மயல் மலர்ந்த காதை

                    மயல் மலர்ந்த காதை – 2

                    நாவலின் கருவும், களமும் உருவான பிறகு, ஆசிரியருக்கு அனுப்பிய ஒலிக்குறிப்பை என் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். வாசிப்பிலும், எழுத்திலும் சிறந்த என் நெருங்கிய வட்டம் அது. இதைக்கேட்டதும் பதறினார்கள். இந்த நாவலில் காமம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது. அது சரியாக வருமா என்று அஞ்சினார்கள். அதற்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய கிளாசிக் நாவல் எனக்கு எழுத்துவட்டத்தில் மிகச்சிறந்த அறிமுகத்தை எனக்கு வழங்கும் என்று நம்பியிருந்தார்கள். முதலில் வரும் நாவலாக இதுவா அமைய வேண்டும்

                    மேலும் வாசிக்க…


                    • October 1, 2025
                      எழுத்து, மயல், மயல் மலர்ந்த காதை

                      மயல் மலர்ந்த காதை – 1

                      இந்த வருடம் வேறு ஒரு பெரிய நாவலைத் திட்டமிட்டருந்தேன். பெரிய கேன்வாஸில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஃபேண்டஸி ஃபிக்‌ஷன் கதையாக அது இருந்தது. அதைப் பற்றி ஆசிரியரிடம் பேசி, விவாதித்து, எழுதவும் தொடங்கினேன். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றை எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் நேரில் அழைத்தார். ‘இதை தமிழகத்தில் வேறு எந்த பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தாலும் உடனே பிரசுரம் செய்வார். சம்பவங்கள், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் நன்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த நாவலை மொழியால் இன்னும்

                      மேலும் வாசிக்க…


                      • September 27, 2025
                        எழுத்து, மயல்

                        முதற்சொல்

                        ஜேம்ஸ் பேட்டர்சன் தன்னுடைய எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் ‘முதல் வரிகள்’ என்று ஒரு தனி அத்தியாயமே வைத்திருப்பார். எப்படி முதல் வரியிலிருந்தே கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்ல வேண்டும் என்று விரிவாக அதில் விளக்குவார். (அபிநயங்களோடு அவர் வகுப்பெடுப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்) வாசகனுக்கு மட்டுமல்ல இந்த முதல் வரியும் முதற்சொல்லும் வந்து சேருவது ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே மிக முக்கியமான தருணம். அது வந்துவிட்டபிறகு மனிதனாக இருக்கும் அவன் கலைஞன் என்ற சிறகுகள் அணிவிக்கப்படுகிறான். பின்பு அவன் செல்லும்

                        மேலும் வாசிக்க…


                      1 2 3 … 17
                      Next Page→

                      ©2025-2026 Sivaraman Ganesan

                      • Subscribe Subscribed
                        • சிவராமன் கணேசன்
                        • Already have a WordPress.com account? Log in now.
                        • சிவராமன் கணேசன்
                        • Subscribe Subscribed
                        • Sign up
                        • Log in
                        • Report this content
                        • View site in Reader
                        • Manage subscriptions
                        • Collapse this bar